வெளிநாட்டிற்கு நீரா பானத்தை ஏற்றுமதி செய்ய திட்டம்

வெளிநாட்டிற்கு நீரா பானத்தை ஏற்றுமதி செய்ய திட்டம்

நமது உடம்பு குளிர்ச்சியாக இருக்க நமது முன்னோர்கள் நீராகராம் பயன்படுத்தி வந்தது குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினர் நீராகாரம் என்றால் என்ன? என்று கேட்கும் நிலையே உள்ளது

இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு நீராபானத்தை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் வகையில், பொள்ளாச்சி அருகே பாட்டிலிங் ஆலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தென்னை மரத்தில் இருந்து நீரா பானத்தை இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததை அடுத்து நீரா பானத்தை இறக்கி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். நீரா பானம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் பொதுமக்களிடையேயும் அதிக வரவேற்பு காணப்பட்டது.

இந்நிலையில், தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொள்ளாச்சியில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு நீரா பானத்தை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்வதற்கு தமிழக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply