2 ஆண்டுகளுக்கு பொறியியல் கல்லூரிகள்… அரசின் அதிரடி முடிவு

2 ஆண்டுகளுக்கு பொறியியல் கல்லூரிகள்… அரசின் அதிரடி முடிவு

பொறியியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போகிறது. இந்த ஆண்டு ஒரு லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளது

இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கில் அதிரடி முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. இதன்படி அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு இணையான மதிப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் இருந்தது. ஆனால் புற்றீசல் போல் பல பொறியியல் கல்லூரிகள் தோன்றியதால் அந்த படிப்புக்கே மதிப்பு இல்லாமல் போய்விட்டதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply