2.1 கிமீ தூரத்தில் இருந்தபோது தகவல் தொடர்பு துண்டிப்பு: என்ன ஆச்சு விக்ரம் லேண்டர்

2.1 கிமீ தூரத்தில் இருந்தபோது தகவல் தொடர்பு துண்டிப்பு: என்ன ஆச்சு விக்ரம் லேண்டர்

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கிய நிலையில் அதாவது 2.1 கிமீ தூரத்தில் இருந்தபோது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் மேலும் கூறுகையில் “லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Leave a Reply