அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஒரு சரித்திர சாதனை
ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்துடன் வெளிவந்தும் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த படம் செய்த வசூல் சாதனையை அஜித்தின் அடுத்த படமான ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தால் கூட முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று தனது டுவிட்டரில் ‘பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது’ என்று பதிவு செய்துள்ளது.
இந்த டுவீட் இன்று மதியம் முதல் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது