அஜித்துடன் மூன்றாவது முறையாக இணையும் மகள் நடிகை!

அஜித்துடன் மூன்றாவது முறையாக இணையும் மகள் நடிகை!

அஜித்தின் மகளாக ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பேபி அனிகா சுரேந்திரன் மீண்டும் அஜித்துடன் ‘தல 60’ படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் அனிகா சுரேந்திரன் தனது டுவிட்டரிலும் இதுகுறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

‘தல 60’ திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக அனிகா சுரேந்தர் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இரு படங்களில் அஜித்தின் மகளாக அவர் நடித்துள்ளதால் ரசிகர்கள் அவரை உண்மையாக அஜித்தின் மகளாக பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மீண்டும் அவருடன் நடிக்கவிருப்பது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு கோடைவிடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

மோட்டார் பைக் ரேசர் கேரக்டரில் அஜித் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படம் அஜித் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளும் உருவாகும் முதல் அஜித் படம் என்பதும் ஒரு முக்கிய அப்டேட் ஆகும்

Leave a Reply