கல்யாணம் ஆனா கம்முன்னு’, பேச்சுலர்ன்னா ‘ஜம்முன்னு’: ஹர்பஜன்சிங் டுவீட்

கல்யாணம் ஆனா கம்முன்னு’, பேச்சுலர்ன்னா ‘ஜம்முன்னு’: ஹர்பஜன்சிங் டுவீட்

ஜிவி பிரகாஷ் நடித்த ’சிவப்பு மஞ்சள் பச்சை’ சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

இந்த போஸ்டரை பிரபல கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேச்சுலர்’ என்ற டைட்டில் கொண்ட போஸ்டரை வெளியிட்ட ஹர்பஜன் சிங் அவர் டுவிட்டர் பக்கத்தில் ’கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…🤫 கமிட் ஆனா உம்முனு இருக்கனும்…🙇
Bachelorனா ஜம்முனு இருக்கலாம்…😎!#Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்

படு கவர்ச்சியாக இருக்கும் இந்த போஸ்டர் பார்க்கவே கிறங்கடிக்கும் வகையில் இருப்பதாக ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், ஜோடியாக கோவையைச் சேர்ந்த மாடல் அழகி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply