அட்ரா சக்க… ஆன்லைன் திரைப்பட டிக்கெட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த அமைச்சர்

அட்ரா சக்க… ஆன்லைன் திரைப்பட டிக்கெட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த அமைச்சர்

ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை என்றும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ சற்றுமுன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ஒரே நேரத்தில் 10 டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்தால் 10×30 என ரூ.300 சேவைக்கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இனி எத்தனை டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்தாலும் ரூ.10 மட்டுமே சேவைக்கட்டணம் செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply