மூன்றாக பிரிக்கப்படுகிறதா சென்னை? பிரித்தால் என்ன ஆகும்?

மூன்றாக பிரிக்கப்படுகிறதா சென்னை? பிரித்தால் என்ன ஆகும்?

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு வரும் நிலையில் அதே நிர்வாக வசதிக்காக சென்னை மாவட்டம் மூன்று மாவட்டங்களாகவோ, அல்லது மூன்று மாநகராட்சியாகவோ பிரிக்க அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு சென்னையை பிரித்தால் என்ன ஆகும் என் முன்னாள் சென்னை மேயர்மா.சுப்பிரமணியம் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னையை பிரித்தால் நிர்வாக ரீதியாக அணுகுவதற்குச் சுலபமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில், பிரிக்க இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். ஆனால், சென்னையை மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கிறார்களா? அல்லது மாவட்டம் வாரியாகப் பிரிக்கிறார்களா? என்பது இன்னும் சரியாக விளங்கவில்லை.

மூன்று மாநகராட்சிகளாக, சென்னையைப் பிரிப்பதைவிட ஆவடியைத் தலைமையாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் உருவாக்கலாம். மையப்பகுதியான பாரம்பர்யமிக்க ஒரு பெருநகராட்சியான சென்னையை அப்படியே விட்டுவிட வேண்டும். பெருமாநகராட்சியாக உருவாகியிருக்கும் இதைக் கூறுபோடாமல், சென்னையோடு ஒட்டியிருப்பவற்றைப் புதிய மாநகராட்சிகளாக உருவாக்கிக்கொள்ளலாம் என்பது என் எண்ணம் என்று மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply