திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு

திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு

பூட்டு என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது திண்டுக்கல் பூட்டு தான். பூட்டுகளில் பல வகைகள் உண்டு. சாவி போட்டு பூட்டுவது, அமுக்கி பூட்டுவது, நம்பர் லாக் பூட்டு என பல விதங்களில் பூட்டுக்கள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது

இந்த நிலையில் இந்த நூற்றாண்டில் மக்கள் டிஜிட்டலுக்கு மாறி வரும் நிலையில் பூட்டுக்களும் டிஜிட்டல்களில் மாறிவிட்டது. இந்த பூட்டை திறக்கவோ, பூட்டவோ சாவிகள் தேவையில்லை. கைரேகை வைத்தால் போதும் பூட்டிக்கொள்ளும், அதேபோல் கைவிரல்களை அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் அழுத்தினால் பூட்டு திறந்து கொள்ளும்

ஒரே பூட்டில் மூன்று முதல் பத்து பேர் வரை தங்கள் கைரேகையை பதிவு செய்து அனைவரும் திறந்து கொள்ளலாம் என்பதும் இதில் உள்ள இன்னொரு வசதி. தற்போது லெனோவா நிறுவனம் வெளீயிட்டுள்ள டிஜிட்டல் பூட்டு பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகின்றது

Leave a Reply