’பிகில் பாடல் வெளியீட்டு விழாவிற்கு செல்வதில் விஜய்க்கு திடீர் சிக்கல்

’பிகில் பாடல் வெளியீட்டு விழாவிற்கு செல்வதில் விஜய்க்கு திடீர் சிக்கல்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமான வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் இன்று சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது

இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள இந்த விழாவிற்கு இப்பொழுதே பார்வையாளர்களும், விழாக்குழுவினர்களும் அனைவரும் வருகை தரத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக இந்த விழா நடைபெறும் கல்லூரி இருக்கும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து தற்போது நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளதாகவும் அவரது மெதுவாக ஊர்ந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இதே சாலை வழியாகத்தான் பாடல் வெளியீட்டு விழாவுக்கு விஜய்யும் வரவேண்டும் என்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளித்து அவர் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இருப்பினும் போக்குவரத்து போலீசார் விரைவில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply