தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து கிளம்புகின்றன?
தீபாவளி திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது அனைவரும் சிறப்பு பேருந்துகளை நம்பியுள்ளனர். தமிழக அரசு தீபாவளி தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் கிளம்புகின்றன என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது
இதன்படி ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், வேலூர் காஞ்சிபுரம் ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும், திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்தும், தஞ்சாவூர் கும்பகோணம் விக்கிரவாண்டி வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும், பாண்டிச்சேரி கடலூர் சிதம்பரம் பேருந்துகள் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்தும், மதுரை நெல்லை கோவை இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சிறப்பு பேருந்துகள் காண முன்பதிவுகள் வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த சிறப்பு பேருந்துகளை சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது