முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி அறிவிப்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி அறிவிப்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள் வரும் 27,28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் லதா அவர்கள் கூறியபோது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள் செப்டம்பர் 27,28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கென தமிழகத்தில் 154 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும், இந்த தேர்வினை 8 திருநங்கைகள் உள்பட ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளதாகவும், தேர்வுகள் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply