பாரத ரத்னாவுக்கு இணையான புதிய விருது அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவின் உயர்ந்த விருதாக ‘பாரத ரத்னா’ விருது தற்போது கருதப்பட்டு வருகிறது. வாழ்நாள் சாதனை செய்த ஜாம்பவான்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் “சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற புதிய விருதை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த விருது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
“சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருதை முதலாவது பெருபவர் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்