கவின் வெளியேறியதால் லாஸ்லியாவுக்கு குவியும் ஓட்டுக்கள்!

கவின் வெளியேறியதால் லாஸ்லியாவுக்கு குவியும் ஓட்டுக்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் இன்று வெளியேறுவது சந்தேகம் தான் என மீடியாக்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தாலும் அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி விட்டு இன்று உண்மையிலேயே கவின் வெளியேறிவிட்டார்

கவின் வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் சோகம் அடைந்தனர். குறிப்பாக லாஸ்லியாவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இதனை அடுத்து கவின் மீதுள்ள பரிதாபம் லாஸ்லியா மீது பார்வையாளர்களுக்கு திரும்பி உள்ளது என்று தெரிகிறது

தற்போது டுவிட்டரில் பெரும்பாலானவர்கள் தாங்கள் லாஸ்லியாவுக்கு ஐம்பது ஓட்டு போட்டதாக புகைப்படத்துடன் பதிவு செய்து வருகின்றனர். லாஸ்லியாவை எப்படியாவது வெற்றி பெற வைப்போம் என்றும் பலர் குறைகூறி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கவினும் இதை நினைத்துதான் வெளியேறினாரா என்பது கூட யோசிக்கத் தோன்றுகிறது. இந்த வார நாமினேஷன் முகினை தவிர மீதி நால்வரும் உள்ள நிலையில் தற்போது உள்ள நிலைமையை வைத்து பார்த்தால் லாஸ்லியா நிச்சயம் இந்த வாரம் காப்பாற்றப்படுவார்கள் என்றே தற்போது விழுந்து கொண்டிருக்கும் ஓட்டுகளில் இருந்து தெரியவருகிறது

அப்படியானால் இந்த வாரம் வெளியேறுவது யார்? சாண்டி அல்லது ஷெரினாக இருக்கலாம் என்றும் இதில் ஷெரினுகு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

Leave a Reply