பார்த்திபனின் காலில் விழுந்தாரா விஜய் அப்பா?

பார்த்திபனின் காலில் விழுந்தாரா விஜய் அப்பா?

பார்த்திபன் என்ற ஒரே ஒரு நபரின் கடின முயற்சியால் உருவான ’ஒத்த செருப்பு திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடந்த நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் கலந்து கொண்டு பேசியதாவது:

என் வாழ்நாளில் இதுவரை படம் பார்த்துவிட்டு மூன்று பேர்களின் காலில் மட்டும் விழுந்துள்ளேன். ஒருவர் ’சங்கராபரணம்’ இயக்குனர் கே விஸ்வநாத், இரண்டாமவர் ’அரங்கேற்றம்’ இயக்குநர் கே பாலச்சந்தர், மூன்றாமவர் புதிய வார்ப்புகள் இயக்குநர் ’பாக்யராஜ்.’ இந்த மூவரை அடுத்து தற்போது பார்த்திபனுக்கு எனது மரியாதையை அளித்துள்ளேன்

ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கேரக்டர் இரண்டு மணி நேரம் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. மேக்கப் போடாத இந்த முகத்தை இரண்டு மணி நேரம் பார்க்க வைத்தது மட்டுமன்றி ரசிக்கவும் வைத்துவிட்டார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது கடின முயற்சி ஒன்றே காரணமாகும் என்று இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்தார்

Leave a Reply