மேயர் வீட்டின் பாதாள அறையில் 13 ஆயிரம் கிலோ தங்கம்: அதிர்ச்சி தகவல்
அரசியல்வாதிகளில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் ஒரு மேயரின் வீட்டின் பாதாள அறையில் 13 ஆயிரம் கிலோ தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் இந்தியாவில் அல்ல, சீனாவில் என்பது ஒரு ஆறுதலான விஷயம்
சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவியில் இருந்த 58 வயது ஜாங் குயின் என்பவர் முன்னாள் மேயராக இருந்தவர். இவர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார் எழுந்ததையடுத்து அவரது வீட்டில் சீன போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் ஒரு ரகசிய பாதாள அறையை கண்டுபிடித்த போலீஸ் அதிகாரிகள் அதை திறந்து பார்த்து போது அதில் 13 ஆயிரம் கிலோ தங்கம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதுமட்டுமின்றி இந்திய மதிப்பில் 234 கோடி பணத்தையும் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தங்கம் மற்றும் ரொக்கத்தை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சீன நாட்டின் சட்டப்படி இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணம் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது