சீன அதிபர் வருகையால் பள்ளிகளுக்கு விடுமுறையா?
சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு நாளை வருகை தரவுள்ள நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்த நிலையில் நாளை சென்னை நகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. சீனா அதிபர், பிரதமர் மோடி ஆகியோர் வரும் நேரங்களில் அந்த பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல் என தகவல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது