உங்களுக்கு அரசியல் செட் ஆகாது, அஜித்தான் அடுத்த முதல்வர்: ரஜினியிடம் கூறிய ஜோதிடர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி தனியாக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்பதை அவரிடம் நேரில் கூறியதாக பிரபல ஜோதிடர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நீங்கள் சினிமாவில் தொடர்ந்து நடித்தால் பணம், புகழ் அதிகரிக்கும் என்றும், அரசியல் வேண்டாம் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் திரையுலகை பொருத்தவரையில் அஜித்துக்கு மட்டுமே ஆட்சியை பிடிக்கும் அம்சம் அவரது ஜாதகத்தில் இருப்பதாகவும், அவர் அரசியலுக்கு வருகிறாரா? என்பது தெரியவில்லை, ஆனால் வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் ரஜினியிடமே தான் கூறியதாகவும் அந்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.