ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகும் திரைப்படங்கள்: பொருளாதார மந்தநிலையா?
இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்கள் சர்வ சாதாரணமாக ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகி வருவதால் பொருளாதார மந்த நிலை நாட்டில் நிலவவில்லை என்பதையே காட்டுகிறது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி உள்ளார்.
அக்டோபர் 2-ம் தேதி வெளியான மூன்று திரைப்படங்கள் ரூ.120 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளதாகவும், நல்லபொருளாதாரம் கொண்ட நாட்டில் 120 கோடி ரூபாய் வசூல் என்பது பெரிய விஷயம் என்றும், உலகளாவிய நிலையில் பொருளாதாரம் மந்த நிலையாக இருந்தபோதிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.,
மேலும் பிரதமர் மோடி நேர்மையான அரசாங்கத்தை வழங்குவதாகவும், அவர் தேசியவாதத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், மக்கள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.