ஒரு வகையில் நான் இன்னும் அகதி தான்: தலாய்லாமா
சீன, திபெத் பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சீனாவிடம் இருந்து சுதந்திரம் பெற திபெத்தியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
திபெத்தியர்களின் தலைவரான தலாய்லாமா, இந்தியாவில் பல ஆண்டுகளாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சீன அதிபரின் இந்திய வருகைக்கு பின் பேட்டி அளித்த தலாய்லாமா, ‘இந்தியாவில் சுதந்திரமாக திபெத்தியர்கள் வாழ்கிறோம். ஒரு வகையில் நான் அகதியாக இருக்கிறேன், ஆனால் இந்தியாவின் சுதந்திரத்தை நான் அனுபவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.