நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: 5 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு
தமிழகத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த முறைகேட்டில் தற்போது மருத்துவ படிப்பில் படித்து வரும் மாணவர்கள் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது
இதனையடுத்து அடுத்தக்கட்ட ஆய்வாக 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை, ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையிடம், மாணவர்களின் கைரேகை பதிவுகளை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது
இந்த கைரேகை ஆய்வில் நீட் ஆள்மாறாட்டம் செய்த இன்னும் சில மாணவர்கள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது