மத்திய அரசு 7வது ஊதியக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. ராணுவத்தினருக்கு என தனி ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்காக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழு அமைகப்படுவது வழக்கம். இந்த ஊதியக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பளம் உயர்வு வழங்கப்படும். இறுதியாக 2003ம் ஆண்டு அமைக்கப்பட்டது ஊதியக்குழு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைக்கப்பட்டள்ளது.
ராணுவ தளபதிகள் ஏற்கனவே தங்களுக்கு தனிக்குழு அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினர். அவர்களின் கோரிக்கை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினார் பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி. இப்போது அவர்களின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். இந்த குழுவின் தலைவர் யார், உறுப்பினர்கள் பற்றி விவரம் தெரிவிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. மேலும் இதன் மூலம் 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.