இந்து மகா சபா தலைவர் சுட்டுக்கொலை: உபியில் பரபரப்பு

இந்து மகா சபா தலைவர் சுட்டுக்கொலை: உபியில் பரபரப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி படுகாயம் அடைந்துஉயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். லக்னோவில் இந்து மகா சபை தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply