குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வைஃபை: புதிய தகவல்

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வைஃபை: புதிய தகவல்

நகைக்கடை திருட்டு உள்பட பல்வேறு திருட்டுக்களை செய்து ஒளிந்திருக்கும் குற்றவாளிகளை வைஃபை மூலம் கண்டுபிடிக்கலாம் என்றும் இது இன்றைய தொழில்நுட்பத்தில் சாத்தியம் தான் என்றும் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு கட்டிடத்தில், நான்கு சுவர்களுக்குள் யாராவது மறைந்திருக்கிறார்களா? எத்தனை பேர் மறைந்துள்ளனர்? என்பதை ‘வை-பை’ சமிக்ஞைகளை வைத்தே கண்டறியலாம் என்றும் கிராஸ் மாடல் ஐ.டி., எனப்படும் இந்த தொழில்நுட்பம் சந்தேகத்திற்குரிய அறையின் சுவர்களை நோக்கி வை-பை சமிக்ஞை செலுத்தினால் பதில் சமிக்ஞை வாங்கி ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சமிக்ஞை சுவர்களைக் கடந்து செல்லக்கூடியவை என்றும், அந்த சமிக்ஞைகள் குறுக்கிடும் பொருட்கள், நபர்கள் போன்றவற்றையும் அறைக்குள் நபர்கள் இருக்கிறார்களா, எத்தனை பேர் என்பதை அறிய முடியும் என்றும் அதுமட்டுமின்றி கண்காணிப்பு கேமிராவில் பதிவானோரின் நடையையும், அறைக்குள் இருப்போரின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒளிந்திருக்கும் நபர் யார்? என்பதையும் கிராஸ் மாடல் ஐ.டி., தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கலாம் என்றும் இந்த தொழில்நுட்பம் காவல்துறைக்கு மிகவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply