ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்துக்கும் நல்லதல்ல – தனியரசு
ரஜினி கட்சி தொடங்கினால், அது ஒரு சங்பரிவார அமைப்பாகவே இருக்கும். ரஜினி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, வென்று முதல்வராவது அவருக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல என தனியரசு எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
இன்று தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ தனியரசு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்து அந்த கட்சியை வெற்றியடைய செய்தால் கூட பரவாயில்லை. இதனால் ரஜினிக்கும் பாதுகாப்பு, பாஜகவுக்கும் நல்லது நடக்கும்
ஆனால் ரஜினிகாந்த் தனியாக கட்சி ஆரம்பித்து அந்த கட்சி ஆட்சியை பிடித்தால் அது ரஜினிக்கும் நல்லதல்ல, தமிழகத்திற்கும் நல்லதல்ல என்று கூறினார்.