19 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அரசுப்பள்ளி மாணவர்கள்: 96 படம் போல் ஒரு நெகிழ்ச்சி

19 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அரசுப்பள்ளி மாணவர்கள்: 96 படம் போல் ஒரு நெகிழ்ச்சி

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ படத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் பள்ளி மாணவர்கள் வாட்ஸ் அப் குரூப் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு சந்தித்து ஒரு விழாவாக கொண்டாடுவார்கள். அதேபோல் ஒரு உண்மை நிகழ்ச்சி திருத்தணி அருகே நடந்துள்ளது

திருத்தணி அருகே அமிர்தாபுரம் என்ற பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2000ஆம் ஆண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் சரியாக 19 ஆண்டுகள் கழித்து தாங்கள் படித்த அதே பள்ளியில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்கு 2000ஆம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் சரவணன், பவானி, ராஜேஸ்வரி, நாகராஜன் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். 2000ஆம் ஆண்டு படித்த 68 மாணவர்களில் 45 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பதும் பெரும்பாலோனார் தங்களுடைய கணவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது ஒருவரை, ஒருவர் கட்டித் தழுவி, ஆனந்தக்கண்ணீர் வடித்த காட்சி பெரும் நிகழ்ச்சியாக இருந்ததாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கூறினார். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனிதம் மறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது

Leave a Reply