ஆழ்துளை கிணற்றில் குழந்தை: இதுவரை நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் நேற்று இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது
நேற்று குழந்தை விழுந்தது முதல் தற்போது வரை இங்கே என்ன நடந்தது என்பதை தற்போது பார்ப்போம்
நேற்று மாலை 5.30 மணிக்கு வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து
இதனை அடுத்து மாலை 6 மணிக்கு தீயணைப்புத் துறையினரும் வருவாய்த் துறையினர் மீட்பு பணியை தொடங்கினார்
மாலை 7 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டது
முதல் முயற்சியாக ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பெரிய பள்ளம் தோண்டப்பட்டது
அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு இரவு 9 மணிக்கு வந்தனர்
போர்வெல் ரோபோ கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது
இரவு 10 மணிக்கு கயிறு மூலம் குழந்தையை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது
இரவு 11 மணிக்கு குழந்தையிடம் பெற்றோர்கள் உறவினர்கள் பேச்சு கொடுத்தனர்
நள்ளிரவு 12 மணிக்கு மீட்பு பணிக்காக மதுரையிலிருந்து மணிகண்டன் என்பவர் கொண்டு வந்த பிரத்தியேக கருவி பயன்படுத்தப்பட்டது
அதிகாலை 3 மணிக்கு எட்டு குழுவினர் கொண்டு வந்த நவீன சாதனங்கள் மூலம் குழந்தையை மீட்க தொடர்ந்து முயற்சிகள் நடந்தன
அதிகாலை 4 மணிக்கு குழந்தையை மீட்க புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரமணி குழுவினர் வருகை தந்தனர்
அதிகாலை 5 மணிக்கு 26 அடியில் இருந்த குழந்தை திடீரென 70 அடி ஆழத்தில் சென்று விட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது
காலை எட்டரை மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழு வந்து சேர்ந்தது
மொத்தத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 17 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வந்த போதிலும் இன்னும் குழந்தையை வெளியே எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது