ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்துக்க்காக துணி தைக்கும் தாய்: உருக்கமான தகவல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 2 வயது சுர்ஜித் என்ற குழந்தை நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது
இந்த குழந்தையை மீட்க கடந்த 17 மணி நேரமாக மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் போராடி வருகின்றனர். பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் இன்னும் குழந்தையை மீட்க முடியாமல் மீட்பு பணியினர் திணறி வருகின்றனர். இருப்ப்பினும் இந்த குழந்தை உயிருடன் மீட்கப்படும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் உள்ளது
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் மீட்கப்பட்ட பிறகு அந்த குழந்தை அணிவதற்காக அவரது தாயார் துணி தைத்து கொண்டிருக்கின்றார். இந்த உருக்கமான காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது