சுர்ஜித்தை மீட்க சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது:
நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தையை மீட்க ஒன்றரை நாட்களாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்
தேசிய மீட்பு படையினர்களும் தங்கள் பங்கிற்கு முடிந்தவரை முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை சுர்ஜித்தை மீட்க முடியவில்லை இந்த நிலையில் தற்போது புதிய முயற்சியாக ஓஎன்ஜிசி களத்தில் இறங்கியுள்ளது
ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஆழ்துளை கிணறு அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அந்த பள்ளத்தில் இருந்து சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறுக்கு பாதையை ஏற்படுத்தி சுர்ஜித்தை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது
சுர்ஜித் விழுந்த ஆழ்குழாய் கிணறு அருகே பள்ளம் தற்போது அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் சுர்ஜித் மீட்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன