சுஜித்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்க பிரபல நடிகரின் யோசனை!

சுஜித்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்க பிரபல நடிகரின் யோசனை!

சிறுவன் சுஜித் அவனது பெற்றோர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திவிட்டு சவப்பெட்டியில் மீண்டும் மண்ணுக்குள் புதைந்துவிட்டான். சுஜித்தின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என நாம் கூறிவிட்டு ஓரிரு நாட்களில் சுஜித்தை மறந்துவிட்டு நம்முடைய அன்றாட பணியில் மூழ்கிவிடுவோம். ஆனால் சுஜித்தின் பெற்றோர்களுக்கு இந்த வலி அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் இருக்கும். இந்த நிலையில் சுஜித்தின் பெற்றோர்களுக்கு மீண்டும் சுஜித் கிடைக்க நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு அருமையான யோசனையை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச் சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.

இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது, சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த யோசனையை சுஜித் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply