சுஜித் மீட்புப்பணிக்கு அரசு செய்த செலவும், ஊடகங்களுக்கு கிடைத்த வருமானமும்!
இரண்டு வயது சிறுவன் சுஜித்தை மீட்க கடந்த 25ஆம் தேதி மாலை முதல் 29ஆம் தேதி அதிகாலை வரை அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டு சுஜித்தை மீட்க அத்தனை முயற்சிகளும் செய்யப்பட்டன.
துணை முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், மாநில மற்றும் மத்திய அரசின் மீட்புப்படைகள், ஓ.என்.ஜி.சி ஊழியர்கள், என ஒட்டுமொத்த மீட்புப்பணியாளர்கள் கடந்த நான்கு நாட்களாக உணவு, உறக்கம் இன்றி சுஜித்துக்காக பணியாற்றினர்.
சுரங்கம் தோண்ட ரிக் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது உள்பட இந்த மீட்புப்பணிக்காக சுமார் 5000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மீட்புப்பணிக்காக அரசு சுமார் ரூ.80 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை வைத்து லாபம் தேடியது ஊடகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடி ஒளிபரப்பு செய்து அதில் விளம்பரங்கள் ஒளிபரப்பி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அரசியல்வாதிகள் செய்யும் அரசியலும் ஒருபுறம் என்பது குறிப்பிடத்தக்கது