ராஜூமுருகனின் ஜிப்ஸி படத்திற்கு ஒருவழியாக கிடைத்த சென்சார் சான்றிதழ்!
சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால், ‘ஜிப்ஸி’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்க தணிக்கை வாரியம் மறுத்துவிட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் டிரிபியூனலுக்கு சென்று படத்திற்கு ஏ சான்றிதழ் பெற்று வந்துள்ளனர்.
இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் அந்த காட்சிகளை வெட்ட வேண்டும் என தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அப்படி நீக்கினால் படத்தின் கதையையே மாற்ற வேண்டியதிருக்கும் என்று இயக்குனர் ராஜூமுருகன் வாதாடியதை அடுத்து இந்த படம் டிரிபியூனலுக்கு சென்றது
இந்த நிலையில் தற்போது டிரிபியூனலில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தனையடுத்து இந்த படம் இம்மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷாசிங் நடிப்பில் உருவாகிய இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் சமூக ஆர்வலர்களான பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி உள்பட ஒருசில பிரபலங்கல் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது