பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்பிபிக்கு அவமரியாதையா?
சமீபத்தில் பிரதமர் மோடி வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பாலிவுட் பிரபலங்களான அமீர்கான், ஷாருக்கான், மற்றும் சில முன்னணி நடிகைகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழம்பெரும் பாடகர் எஸ்பிபிக்கு அவமரியாதை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்பிபி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது:
பிரதமர் மோடியின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது பாதுகாப்பு வீரர்கள் என்னிடம் இருந்த செல்போனை வாங்கி கொண்டனர். ஆனால், பாலிவுட் நடிகர்கள் மற்றும் சில நடிகைகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது’ என்று கூறியுள்ளார்.
https://www.facebook.com/SPB/posts/2672550912802732?__xts__[0]=68.ARCT1xvS8u6OIPwfJGcRoNeE_jHOPrMTNL4autJxNMvZidCPAZS-twFIfN1EfnPD2a-cWyns8-53R40IHbDFfDwmf03zq4qy2cgy_2nAlpvojVB_u20PsadW208HRZ4hcWRKxGlh6lsKKo0aI1v89pNXfqUjQCrgTQ3KJcG18ysPp-uSI5A1Lkrbc8qlt16suQS4NZNiOxSqOtULZ652P_gidqRQ48D9HsnezfzMfweJX9zFhatcOIUtP_gtY9Tf_EFgVmUcQhivEoABw2dSyEoEvABwavfpdbYsuZbZQmfflE51ll_B0lUpBSEyn5iyyAc6YzLYi0_eZy4hcQJf91pCsA&__tn__=-R