அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கெடு
டெல்லியில் காற்று மாசு என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது
இந்த வழக்கின் விசாரணையின்போது, ‘காற்று மாசுவால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு இருப்பதாக தெரியவில்லை. இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட், டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாட்டிற்கு பயிர்க்கழிவு எரிப்பு காரணம் என்றால் மாநில அரசு, கிராம பஞ்சாயத்துக்களே முழு பொறுப்பு என்று கூறியது
மேலும் ஐ.ஐ.டி. நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும் என்றும், காற்று மாசு தடுப்பு நடவடிக்கை தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது