நடிகையாக நடிக்கும் ஸ்ரீரெட்டி: அதிர்ச்சியின் உச்சத்தில் உச்ச நடிகர்கள்
தெலுங்கு, மற்றும் தமிழ் நட்சத்திரங்கள் மீது மீடூ குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் ராஜேந்திரபிரசாத் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் ஸ்ரீரெட்டி நடிகை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கூறிய மீடு குற்றச்சாட்டுக்கள் குறித்த காட்சிகளும் உள்ளதால் தெலுங்கு மற்றும் தமிழ் பிரபல நடிகர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது
ராஜேஷ்வர் ரெட்டி மற்றும் கருணாகரெட்டி தயாரித்து வரும் இந்த படத்தை பவானிசங்கர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ராஜேந்திர பிரசாத் நடித்த ‘ட்ரீம்’ என்ற படத்தை கடந்த 2012ஆம் ஆண்டு இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ராஜேஷ் என்பவர் இசையமைத்து வருகிறார்.