வாட்ஸ் அப் செயலியினால் ஸ்மார்ட்போனில் சார்ஜ் குறைகிறதா? திடுக்கிடும் தகவல்

வாட்ஸ் அப் செயலியினால் ஸ்மார்ட்போனில் சார்ஜ் குறைகிறதா? திடுக்கிடும் தகவல்

ஒரு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பமாக இருக்கும். பல ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் விஷயத்தில் ஏமாற்றினாலும் சியோமி போன்கள் அனைத்தும் எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் 24 மணி நேரம் சார்ஜ் நிற்கும் என்று வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது

இந்த நிலையில் சியோமி உள்பட ஒருசில முக்கிய மாடல்களில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவதால் சார்ஜ் விரைவாக முடிந்துவிடுவதாக புகார் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் புகார் எழுந்துள்ளதாகவும், ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமல்லாமல் ஆப்பிள் போன்களுக்கும் வாட்ஸ்அப்-ஆல் சார்ஜ் பிரச்சனை வருவதாகவும் கூறப்படுகிறது

சியோமியின் ரெட்மி நோட் 7, சாம்சங் கேலக்ஸி S9, ஹானர் 6X மற்றும் ஒன்ப்ளஸ் மாடல் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி சார்ஜ் நிற்காமல் போவதாகவும் இதுகுறித்து வாட்ஸ் அப் தொழில்நுட்ப பிரிவு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply