உலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்
வீல்சேர் என்றாலே உட்கார்ந்து கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டது என்பதும் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வீல்சேர்கள் உதவும் என்பதும் அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் மெட்ராஸ் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் குழு ஒன்று முதல்முறையாக எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை உருவாக்கியுள்ளனர்.
இந்த வீல்சேரில் உட்கார்ந்து கொண்டும் செல்லலாம், தேவையான போது எழுந்து நிற்கவும் செய்யலாம். எனவே இனி மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வித்தியாசமான வீல்சேரின் விலை ரூ.15 ஆயிரம் மட்டுமே என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்,