டாக்டர் ராமதாஸின் 1000 ஏக்கர் நிலமும் பஞ்சமிதான்: திமுக அதிரடி குற்றச்சாட்டு

டாக்டர் ராமதாஸின் 1000 ஏக்கர் நிலமும் பஞ்சமிதான்: திமுக அதிரடி குற்றச்சாட்டு

கடந்த சிலநாட்களாக பஞ்சமி நிலம் குறித்த சர்ச்சை கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. அசுரன் படத்தை பார்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் சொன்ன கருத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பிரச்சனை இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது

இந்த நிலையில் நேற்று முரசொலி அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்த நிலையில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியபோது, முதன் முதலில் ஆரம்பித்து வைத்த மருத்துவரின் நிலம் ஆயிரம் ஏக்கர் யார் யாருடையது என்பது குறித்து வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

திமுகவின் இந்த குற்றச்சாட்டுக்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை!

முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply