சென்னை ஐஐடியில் தற்கொலையை தடுக்க ஸ்பிரிங் திட்டம்!

சென்னை ஐஐடியில் தற்கொலையை தடுக்க ஸ்பிரிங் திட்டம்!

சென்னை ஐஐடியில் பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ளும் சோகமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் கூட ஃபாத்திமா என்ற ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மின் விசிறியில் தூக்கு மாட்டி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க புதிய தொழில்நுட்பம் ஒன்று மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாணவ, மாணவிகளின் விடுதி அறைகளில் மின் விசிறியில் ஸ்பிரிங் போன்ற பொருளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பிரிங்கை பொருத்தியபின் கூடுதல் எடையை மின் விசிறி இழுக்க நேர்ந்தால் ஸ்பிரிங் அமைப்பின் உதவியோடு தரைக்கு வந்துவிடும். எனவே மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply