மகாராஷ்டிரா பாஜக அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்: ஒரே நாளில் கவிழ்ந்துவிடுமா ஆட்சி?

மகாராஷ்டிரா பாஜக அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்: ஒரே நாளில் கவிழ்ந்துவிடுமா ஆட்சி?

மகாராஷ்டிராவில் முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பாஜக ஆட்சி ஒரே நாளில் கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

2018ஆம் ஆண்டில் எடியூரப்பாவை 48 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது போல், தேவேந்திர ஃபட்னாவிசுக்கும் உத்தரவிட வேண்டும் என சிவசேனா தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply