உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்!

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சி தேர்தலில் குறித்த ஒரு வழக்கை திமுக பதிவு செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரும்பவில்லை என்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுப்பதில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக, உள்ளாட்சி தேர்தலை சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடத்துவதே சரியானதாக இருக்கும் என இரண்டு கட்சிகளும் கருதுவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன

இந்த நிலையில் திடீரென திமுக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது நடைபெறுவது சந்தேகமே என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியபோது ’உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுகவுக்கு விருப்பம் இல்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளதாகவும், யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply