எனை நோக்கி பாயும் தோட்டா: திரை விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா: திரை விமர்சனம்

தனுஷ், மேகாஆகாஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த திரைப்படம் நீண்ட கால தாமதமாகி இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

தனுஷ் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் மேகாஆகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே மேகாஆகாஷை அந்த படத்தின் இயக்குனர் காதலிக்கிறார். ஆனால் மேகாஆகாஷ் தற்செயலாக தனுஷை சந்தித்து அவர் மீது காதலில் விழுகிறார். இதனால் கோபமடைந்த இயக்குநர் கல்லூரியில் இருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார். அதன் பின் நான்கு வருடங்கள் தனுஷ் மற்றும் மேகாஆகாஷ்க்கு இடையே தொடர்பு இல்லாமல் உள்ளது. நான்கு வருடங்கள் கழித்து திடீரென ஒருநாள் மேகாஆகாஷ் தனுசுக்கு போன் செய்து ஒரு முக்கிய தகவலை தருகிறார். அந்த தகவலால் அதிர்ச்சி அடையும் தனுஷ், மேகா ஆகாஷை நோக்கி செல்கிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் இரண்டாம் பாதி கதை

மீண்டுமொரு ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்று கூறும் அளவுக்கு இந்த படத்தின் முதல் பாதி முழுவதும் முழுக்க முழுக்க ரொமான்ஸ் காட்சிகளில் நிரம்பி வழிகிறது. தனுஷ், மேகா ஆகாஷ் கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தி இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளை ரசிக்க முடிகிறது. தனுஷும் மேகா ஆகாஷும் கேரக்டர்களில் ஒன்றி நடித்துள்ளதால் உண்மையான காதலர்களை திரையில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது

கவுதம் மேனனின் ’அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சாயல் சற்று இருந்தாலும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு குறை. படத்தில் வாய்ஸ் ஓவர் கொஞ்சம் அதிகமாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்

மிக அழகான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங், ரொமான்ஸ் மற்றும் அதிரடி பின்னணி இசை , ரசிக்கும் வகையான பாடல்கள் என இந்த படத்தில் பிளஸ் பாயிண்டுகள் அதிகம் இருப்பதால் ஒருசில மைனஸ் பாயிண்டுகளை மறந்துவிட்டு அனைவரும் இந்த படத்தை ரசிக்கலாம் என்பதே இந்த படத்தின் விமர்சனமாக உள்ளது

3.25/5

Leave a Reply