தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது

தொகுதி மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் அதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது

இதன்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply