ஐதராபாத் டி20 போட்டியில் இந்திய அணியின் இரண்டு சாதனைகள்
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிக அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்குப் பேருதவியாக இருந்தார். மேலும் அவர் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் விளையாடிய கே.எல்.ராகுல் 62 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளையும் இந்திய அணி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது டி20 போட்டியில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பதும் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரை டார்கெட் செய்து வெற்றி பெற்றதும் நேற்றைய போட்டியில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 207 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 208 ரன்கள் எடுத்தது நேற்றும் 208 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா, மே.இ.தீவுகள், விராத் கோஹ்லி, சாதனை,