அரசியல் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கிய ரஜினிகாந்த்? ரசிகர்கள் அதிர்ச்சி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கூறினார். அதன் பிறகு ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களில்கூட ரஜினி-மக்கள்-மன்றம் தற்போது இயங்கி வருகிறது. தேர்தல் எந்த தேதியில் அறிவித்தாலும் உடனடியாக கட்சியின் பெயர் அறிவிப்பு செய்து போட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நேரத்தில் திடீர் திருப்பமாக 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ரஜினி போட்டியிடப் போவதில்லை என்ற முடிவு எடுத்திருப்பதாக தகவல் வந்துள்ளது
ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமலஹாசன் போட்டியிடவில்லை என்பது போல் ரஜினியும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுவதால் ரஜினிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லை என்ற அதிர்ச்சி ரஜினி ரசிகர்களிடையே உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இனி வரும் நாட்களில் தான் தெரிய வரும்