குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: சென்னையில் 20 பேர் கைதா?
குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தவர்கள் பதிவிறக்கம் செய்தவர்கள் குறித்த பட்டியல் தயாராக இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் காவல்துறை இயக்குநர் ரவி அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார்
இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்த சென்னையை சேர்ந்த 30 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி ரவி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த 30 பேர்களும் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது