ஜார்கண்ட் வெற்றியும் காங்கிரஸ் கொண்டாட்டமும்…

ஜார்கண்ட் வெற்றியும் காங்கிரஸ் கொண்டாட்டமும்…

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து உள்ளது என்பதும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் உள்ளனர்

இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த கொண்டாட்டம் தகுதியானது தானா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சட்டீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே தனித்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால் பாஜக கோவா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் தனித்தும் ஒரு சில மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி புரிந்து வருகிறது

இந்த நிலையில் பாஜகவின் தோல்வியை கொண்டாடும் காங்கிரஸ் தனது கட்சி வெற்றி பெற்றுள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஜார்கண்ட் மாநில தேர்தலில் கூட 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சி தான். அந்த கட்சியுடன் கூட்டணியில் இணைந்ததால்தான் காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே காங்கிரஸ் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்த பின்னரே உண்மையான கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

Leave a Reply