திருப்பதி கோவில் 13 மணி நேரம் மூடப்படும் என அறிவிப்பு: என்ன காரணம்?

திருப்பதி கோவில் 13 மணி நேரம் மூடப்படும் என அறிவிப்பு: என்ன காரணம்?

திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று இரவு 11 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை அடைக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது.

சூர்ய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று இரவு 11 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை மூடப்படும் என்றும் அதன்பின்னர் பரிகார பூஜைகள் செய்த பின்னர் நாளை பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நேரங்களில் பெரிய கோவில்கள் அடைக்கப்படுவது வழக்கமான ஒன்றே. எனவே திருப்பதி கோவிலுக்கு செல்பவர்கள் நாளை மதியம் 2 மணிக்கு மேல் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply