சென்னை ஐஐடி பாதை திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு!

சென்னை ஐஐடி பாதை திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு!

சென்னை ஐ.ஐ.டியில், வேளச்சேரி மார்க்கமாக இருக்கும் ஒரு கதவு மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி-க்கு கிண்டி பகுதியில் பிரதான நுழைவாயிலும், வேளச்சேரி, தரமணி ஆகிய இரண்டு பகுதிகளில் தனித்தனி நுழைவாயில்களும் உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் வேளச்சேரி பகுதியில் உள்ள ஐஐடி நுழைவாயில் திடீரென மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்காக இந்த நுழைவாயில் மூடப்பட்டதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்ததோடு இதுகுறித்த நோட்டீஸ் ஒன்றும் நிர்வாகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

Leave a Reply