இன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து முக்கிய தகவல்

இன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து முக்கிய தகவல்

இன்று நிகழும் காலை 8.08 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.19 மணிக்கு முடியும் சூரிய கிரகணம் குறித்து தற்போது பார்ப்போம்

சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக தெரிவதையே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு ஆகிய 9 மாவட்டங்களில் இன்று சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்கலாம்.

இன்று காலை 9.31 முதல் 9.34 வரை சூரியன் பொன் வளையமாக தெரியும் சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்க தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்திலுள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிரகணம் காரணமாக அனைத்து கோவில்களிலும் இன்று காலை 4.30 மணி முதல் 7.45 மணி வரை மட்டுமே கோயில் நடை திறந்திருக்கும். அதன்பின்னர் காலை 8.08 மணி முதல் பிற்பகல் 11.19 மணி வரை நடை மூடப்பட்டு இருக்கும் எனவும் பரிகாரபூஜைகளுக்கு பின் மாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply